மத்திய அரசு வழங்கிய ரூ.2.2 லட்சம் கோடி எங்கே? கர்நாடக முதல்வருக்கு அமித்ஷா கேள்வி

மத்திய அரசு வழங்கிய ரூ.2.2 லட்சம் கோடி எங்கே? கர்நாடக முதல்வருக்கு அமித்ஷா கேள்வி

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. பெங்களூரிலேயே தங்கி பிரச்சாரம் செய்து வரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி பகுதியில் தேர்தல் பிர்ச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

முதல் மந்திரி சித்தராமையா பாதுகாப்பு கருதி இரண்டு தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரை எங்களது வேட்பாளர் ஸ்ரீராமுலு நிச்சயம் தோற்கடிப்பார்.

சித்தராமையா தனது கைகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் அணிந்துள்ளார். அது யாருடைய பணம். மக்களின் பணத்தில் தான் அவர் வாட்ச் வாங்கி அணிந்துள்ளார்.

மாநில அரசு எந்த திட்டத்தை செயல்படுத்துவத்ற்கும் 10 சதவீத கமிஷன் கேட்கிறது. இதனால் இந்த அரசை கமிஷன் அரசு என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14-வது நிதிக்குழுவில் இருந்து 2.2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய பணம் என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply