சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த 3 பேரின் கதி என்ன என்பது தெரியாததால் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகைக்காக நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்றிரவு வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை.
புதுச்சேரிக்கு சென்ற ஹெலிகாப்டர் சென்னை திரும்பாததால் ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகை ஒத்தி வைக்கப்பட்டு ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், நடுவானில் வெடித்துச் சிதறியதா அல்லது கடத்தப்பட்டதா என தெரியாமல் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், அந்த ஹெலிகாப்டரில் சென்ற 2 விமானிகள் உள்ளிட்ட 3 பேரின் கதி என்னவென்று தெரியாததால் பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியில் தமிழக கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் 8 கடற்படை கப்பல்களும், 2 ஹெலிகாப்டர்களும் காணாமல் போன ஹெலிகாப்டரை தேடி வருகின்றன