பெங்களூரில் அம்மா உணவகம். அதிமுக தொண்டர் ஆரம்பித்தார்.

முதல்கட்டமாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம் நாளடைவில் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இங்கு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், சாம்பார் சாதம், லெமன் சாதம், ஆகியவை ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தற்போது தமிழகத்தை கடந்து வெளிமாநிலத்திலும் உருவாக இருக்கின்றது. முதல் கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று பெங்களூரில் உள்ள கலசிபாலயா காவல்நிலையத்திற்கு எதிரே முதல் அம்மா உணவகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த உணவகம் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தற்போதைக்கு செயபடும். காலை 7 மணி முதல் 10 மணிவரை மட்டும் தற்சமயத்திற்கு செயல்படும் என்றும் விரைவில் தினந்தோறும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரைச் சேர்ந்த அதிமுக தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜு தெரிவித்தார். பெங்களூரின் இந்த அம்மா உணவகத்தை இவர் தன் சொந்த முயற்சியால் திறந்து வைத்து இருக்கிறார்.

கர்நாடக அரசு நிதியுதவி செய்தால் இன்னும் பல கிளளகளை பெங்களூரில் திறக்கவுள்ளதாக கிருஷ்ணராஜு தெரிவித்தார்.

Leave a Reply