பிரபல கன்னட நடிகர் மற்றும் கர்நாடக அமைச்சருமான அம்புரீஷ் இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததாக சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளதால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தீன் வீட்டு வசதி துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ். இவர் இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடக அரசியலில் பெரும் புயல் ஏற்பட்டுள்ளது. அம்புரீஷ் முத்தம் கொடுத்த பெண் அவருடைய நெருங்கிய நண்பரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகார் குறித்து அம்பரீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது ”சினிமாவில் நான் பல நடிகைகளுடன் நடனமாடி இருக்கிறேன். அதேபோல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளேன். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயம் குறித்து ராகுல்காந்தியுடம் புகார் போனால்கூட எனக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ”ஒரு தந்தை, மகள் என்ற முறையில்தான் அந்த முத்தம் தரப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக சிலர் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்குகின்றனர். இதனால் என் மனம் புண்பட்டு போய் இருக்கிறது” என்றார்.