எமிஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திருமணம்? எமி கலந்து கொள்கிறாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ பட நாயகியான எமிஜாக்சன் கடந்த சில வருடங்களுக்கு மறைந்த நடிகை ஸ்மீதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபர் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவர் பெயரை இன்னொருவர் பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு காதல் உறுதியாக இருந்தது
ஆனால் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் எமி, சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த, இவரது முன்னாள் காதலர் பிரதீக் பாபர், சான்யா சாகம் என்பவரை காதலித்தார்.
இந்த காதல் இருவீட்டார்களின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மிக விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளனர். இந்த திருமணத்திற்கு எமிஜாக்சன் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.