விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகி எமி ஜாக்சன் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு மேலாடை இன்றி போஸ் கொடுத்துள்ளதால் ஷங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘ஐ’ படத்தில் நடிக்க எமிஜாக்சன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதல் அவர் முழுக்க முழுக்க ஷங்கரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார். படம் முடியும் வரை இரவு கிளப்புகளுக்கு செல்ல கூடாது, வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்பது உள்பட பல கண்டிஷன்களை ஷங்கர் போட்டிருந்தார்.
இந்நிலையில் ‘ஐ’ படத்தில் எமி ஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிந்துவிட்டதால் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலும் லண்டனில் உள்ள மாடலிங் ஏஜன்ஸி ஒன்றுக்கு மேலாடை இன்றி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். லண்டன் நிறுவனத்திற்காக எமி போஸ் கொடுத்திருந்தாலும், தமிழ் பத்திரிகைகளில் ‘ஐ’ படத்தின் நாயகி டாப்லெஸ் போஸ் கொடுத்ததாகத்தான் ஊடகங்களில் செய்தி வருகிறது. இதனால் படத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக ஷங்கர் எரிச்சல் அடைந்துள்ளார்.
மேலும் இந்த செய்தியால் குடும்பத்துடன் வந்து பார்க்க நினைக்கும் ரசிகர்கள் தயக்கம் கொள்வார்கள் என்றும் அதனால் ஐ படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்றும் அவர் கருதுகிறார். எனவே படம் ரிலீஸாகும்வரை இதுபோன்ற போஸ் கொடுக்க வேண்டாம் என ஷங்கர் எமியிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு எமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.