ஏ.என் 32: ஏற்கனவே 3 முறை கோளாறான விமானமா? அதிர்ச்சி தகவல்

ஏ.என் 32: ஏற்கனவே 3 முறை கோளாறான விமானமா? அதிர்ச்சி தகவல்

AN32சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேயருக்கு கடந்த வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு கிளம்பி சென்ற ஏ.என் 32 ரக விமானம், திடீரென கிளம்பிய 15 நிமிடங்களில் மாயமாக மறைந்தது. இந்த விமானத்தில் 6 ஊழியர்கள், 15 வீரர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 8 கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஒருவர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானம் மாயமானதை அடுத்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களின் உத்தரவின்பேரில் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அருப் ராஹா, விமானப்படை பணியாளர் தலைவர் வைஸ் அட்மிரல் எச்.சி.எஸ். பிஷ்த் ஆகியோர் விமானத்தை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். ஆயினும் மூன்று நாட்களாக இந்த விமானம் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் கடலில் மூழ்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவை சேர்ந்த அண்டோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏ.என் 32 ரக விமானம் ஏற்கனவே 3 முறை சிறிய அளவிலான கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த விமானம் மேலெழும்ப குறைந்த தொலைவு கொண்ட ஓடுதளமே போதுமானது என்பதால் இந்த விமானத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை பயன்படுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply