கொலம்பியா விமான விபத்தில் 76 பேர் மரணம். 3 கால்பந்து வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
நேற்று நடைபெற்ற கொலம்பியா விமான விபத்தில் பிரேசில் நாட்டு கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் இந்த விபத்தில் இருந்து 5 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் கால்பந்து வீரர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு கிளம்பிய விமானம் ஒன்று கொலம்பியாவின் மெடலின் அருகே வந்த போது அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் தெறிந்தவுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை கவனித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பிணக்குவியல்கள் இருந்ததாகவும், அதில் 5 பேர் உயிருக்கு போராடியதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஐந்து பேர்களில் 3 பேர் விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.