இந்தியாவில் உள்ள கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் ராமரின் பிள்ளைகளே. அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Sadhvi_Niranjan_jyoti650டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டதால் அந்த மாநிலத்தில் தேர்தல் களை கட்டிவிட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ” இந்த நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகள்தான். அவர்கள்  கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் ராமரின் பிள்ளைகள்தான். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் பேசுகையில் டெல்லியில் ஆட்சியை பிடிக்க இருப்பது ராமரின் மகன் தான் என்று கூரியுள்ளார்.

அமைச்சர் சாத்வி நிரன்சனின் இந்த பேச்சுக்கு ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும் அமைச்சர் நிரஞ்சன் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சாத்வி , தமது பேச்சுக்காக பாராளுமன்றத்தில் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் சாத்வி மன்னிப்புக் கேட்டுவிட்டதால் இத்துடன் பிரச்னையை முடித்துகொள்ளுமாறும், அவர் முதல் முறையாக எம்.பி. பதவி ஏற்றிருப்பதால்அவருக்கு எப்படி நடந்துகொள்வது என தெரியாது” என்றும் வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1tBJ5A4″ standard=”http://www.youtube.com/v/iPH1ibONU3w?fs=1″ vars=”ytid=iPH1ibONU3w&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6685″ /]

Leave a Reply