திமுக கூட்டத்தில் கல், சோடா பாட்டில் வீச்சு. உயிர் தப்பினார் பொன்முடி
விழுப்புரத்தில் நேற்று நடந்த திமுக கூட்டம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென கல் மற்றும் சோடா பாட்டில் வீசப்பட்டதால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் நூலிழையில் உயிர் தப்பினார்.
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ‘இளைஞர் எழுச்சிநாள்’ என விழுப்புரத்தில் கொண்டாட திமுகவினர் முடிவு செய்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்
விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வாலிபர் பொன்முடியை கொலை செய்யும் நோக்கத்தில் கல்லால் எறிந்தார். அந்த கல் குறிதவறி பொன்முடி அருகில் இருந்தவர் மேல் விழுந்ததால் அவரது பற்கள் உடைந்தது. பின்னர் அந்த வாலிபர் பொன்முடி மீது சோடா பாட்டிலையும் எறிந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திமுகவும் உடனடியாக அந்த மர்ம வாலிபரை பிடித்து உதைத்ததொடு, காவல்நிலையத்தில் ஒப்ப்டைத்தனர். தற்போது அந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையில் அந்த வாலிபர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.