பதவி விலகிய குஜராத் முதல்வருக்கு தமிழக கவர்னர் பதவியா?

பதவி விலகிய குஜராத் முதல்வருக்கு தமிழக கவர்னர் பதவியா?

Anandibenவயது முதுமை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய குஜராத் முதல் ஆன்ந்திபென் படேல் விரைவில் தமிழக கவர்னராக நியமனம் செய்யப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக கவர்னர் ரோசய்யாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய கவர்னர் யார்? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று குஜராத் முதல்வர் ஆனந்திபென் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார். அவரது ராஜினாமாவை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

குஜ்ராத் மாநில புதிய முதல்வராக சுகாதாரத் துறை அமைச்சர் நிதின்பாய் படேல் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் பதவி விலகிய ஆனந்திபென்னுக்கு தமிழக கவர்னர் பதவி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply