தமிழகம், நிகழ்வுகள்அனிதா ராதாகிருஷ்ணன் மீதான நடவடிக்கை ரத்து. க.அன்பழகன் அறிக்கை Posted on November 28, 2015November 28, 2015 by 28 Nov அனிதா ராதாகிருஷ்ணன் மீதான நடவடிக்கை ரத்து. க.அன்பழகன் அறிக்கை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைமை ஒருபக்கம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களையும் சமாதானப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததை அடுத்து அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினர். இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கட்சி உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். English Summary: Anbalagan uplits deciplinary actions against Anitha Radhakrishnan MLA ஒரு பக்கம் ரஷ்யா-துருக்கி பதட்டம், மறுபக்கம் சீனா-ஜப்பான் பதட்டம். 3வது உலகப்போர் வருமா? ராஜ்தாக்கரே கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம். சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்