கோவை: 1000 ஆண்டுகள் பழங்கால நாணயங்கள், தபால்தலை, ரூபாய் நோட்டு கண்காட்சி.

kovai Exhibition 1  கோவையில்  பழங்கால நாணயங்கள், தபால்தலை, ரூபாய்  நோட்டு ஆகியவைகளின் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 12ஆம் தேதி முதல் நடந்த இந்த கண்காட்சியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர்.
 
உலக வரலாறிலிருந்து ஒரு நாட்டின் வரலாறு, தொன்மை, வளம் ஆகியவற்றை அந்தந்த நாட்டின் நாணயங்களைக் கொண்டு அறிய முடியும். இளைய, நவீன சமுதாயமும் நாணய தனித்துவத்தை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நாணய  கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது.

கோவையில் சோனிகா காயின் மற்றும் கரன்சி ஃபேர் சார்பில் மூன்றாவது  தேசிய பழங்கால நாணயம் மற்றும் தபால் தலை கண்காட்சி கடந்த 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை கமலம் துரைசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
 kovai Exhibition

நீலகிரி மாவட்ட வன அலுவலர் சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்த இக்கண்காட்சியில் டெல்லி, நாக்பூர், கொல்காத்தா, அகமதாபாத், மும்பை, ஆந்திரா, கேரளா, சென்னை போன்ற பல பகுதிகளை சேர்ந்த நாணய சேகரிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது சேகரிப்பை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
 
kovai Exhibition 2
1000 ஆண்டு கால பழமையான  சேர, சோழ, பாண்டிய, பாபர், அக்பர், ஆங்கிலேய காலத்தில் வெளியான தங்கம், வெள்ளி, செம்பு  உலோகங்களினால் ஆன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள், அரியவகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு  நாட்டின் பழைய கால அரியவகை பொருட்களும் இருந்தன.

ஜிம்பாப்வே நாட்டு அரசால் கடந்த 2008 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரே நோட்டில் 5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட கரன்சி, அனைத்து நாடுகளின் தபால்தலையை இணைத்து கால்பந்து உலகப் போட்டியின் போது நைஜீரியா சார்பில் வெளியிடப்பட்ட  உலகிலேயே மிகப்பெரிய தபால் தலை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய கடிதங்கள், பண்டைய கால அழகிய வேலைபாடுகள் கொண்ட அணிகலன்கள், அரியவகை பொருட்களும் இருந்தன.
 kovai Exhibition 3

பொது அறிவை வளர்க்கும் நாணய சேகரிப்பு பழக்கம் சேமிக்கும் போது அரிய வகை தகவல்களையும் அறிய முடிகிறது. இன்று சேகரித்த நாணயங்கள் நாளை பல மடங்கு மதிப்பு  உயரும் சேமிப்பால் மட்டுமே அரியவகை தொன்மைகளை காப்பாற்ற முடியும்

Leave a Reply