ஒரே ஒரு மண்குடுவையை 14 கோடி கொடுத்து வாங்கிய இளைஞர்: அப்படி என்ன இருக்கு அதில்?
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே ஒரு மண் குடுவையை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
கடந்த 1980ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த ஒருவர் கலைநயமிக்க மண் குடுவை ஒன்றை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார்
இந்த நிலையில் அந்த மண் குடுவை ஏலத்திற்கு வருகிறது என்பதை அறிந்த விற்றவரின் மகன் அதை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்
அப்படி என்ன அந்த பானையில் இருக்கிறது என்று கேட்டதற்கு எனது தந்தையின் நினைவாக இந்த மண் குடுவை தனக்கு தேவை என்றும் அதற்காக எவ்வளவு விலை கொடுக்கவும் தான் தயார் என்றும் கூறியுள்ளார் இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது