‘கியாண்ட்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?

‘கியாண்ட்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?

cyclone1தென்மேற்கு வங்கக் கடலின் வடமேற்கு திசையில் அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதாக வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த மண்டலம் 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததோடு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறியது என்றும் வானிலை அறிக்கை கூறியது.

இந்நிலையில் இந்த புயலுக்கு ‘கியாண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

மேலும் இந்த புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி நகரும் என்றும் எனவே இந்தப் புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply