53,620 ஏக்கர் பரப்பளவில் ஆந்திராவின் புதிய தலைநகர். ஜூலை 6ல் பூமி பூஜை

AP CAPITALஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தபோது தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவில் சேர்ந்தது. இதனால் ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கும் முயற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது ஆந்திராவின் புதிய தலைநகருக்கு அமராவதி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரை உலக அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய நகரமாக உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய தலைநகருக்கான பூமி பூஜை வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.. புதிய தலைநகர் கட்டுமானப் பணியை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய தலைநகருக்கான வரைபடத்தை சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்து இன்று அதை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுக்கப்பட்டது.

மொத்தம் 53,620 ஏக்கர் பரப்பளவில் அமராவதி நகர் உருவாகிறது. இது 217 சதுர கி.மீ. ஆகும். இதில் தலைமைச்செயலகம் மட்டும் 15 சதுர கி.மீ. பரப்பில் அமைகிறது. அமராவதி நகர் 29 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுக்கு சொந்தமான சாலை நிலங்கள், நீர்த்தேக்கங்கள், வனத்துறை, அறநிலையத்துறை தவிர 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் புதிய தலைநகருக்கு கையப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கி விட்டனர்.

தொடக்கத்தில் அமராவதி நகரில் 60 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என்றும் அவரும் 2035ஆம் ஆண்டில் 1.1.கோடி மக்களும், 2050ஆம் ஆண்டில் 1.35 கோடி மக்களும், அதன்பிறகு 2 கோடி மக்களும் இங்கு வசிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.

Leave a Reply