தமிழகத்தை அடுத்து ஆந்திராலும் முதலீட்டாளர்கள் மாநாடு. ரூ.5 லட்சம் கோடி குவிந்தது
கடந்த ஆண்டு தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் நடந்தபோது பலகோடி ரூபாய்க்கு முதலீடுகள் குவிந்தது. இதனையடுத்து தற்போது ஆந்திர மாநிலத்திலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 4.78 லட்சம் கோடிக்கு ஆந்திராவில் தொழில் தொடங்க பல நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று இதன் நிறைவு விழாவில் பேசியதாவது: இந்தியாவில் பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் பெருக பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பயனாக தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்க பலர் முன் வந்துள்ளனர். சுமார் 4.78 லட்சம் கோடிக்கு 331 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் விசாகப்பட்டினத்தில் இந்த மாநாடு நடைபெறும்.
இந்த மாநாட்டின் முதல் நாளில் 32 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.95 கோடி முதலீடும், இரண்டாவது நாளில் 245 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடி முதலீடு வரும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்பையும் மீறி மாநாட்டின் முடிவில் மொத்தம் 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.
Chennai Today News: Andhra Pradesh expects MoUs of Rs 2 lakh crore