பிளாக்பெரி ஸ்மார்ட் போன்களுக்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் அறிமுகமாகியுள்ளது. இசட் 10, கியூ 10, இசட் 30 உள்ளிட்ட அனைத்து பிளாக்பெரி 10 சாதனங்களிலும் இந்த அப்டேட் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பிளாக்பெரி வேர்ல்ட் ஆப்ஸ்டோர், அமேசான் ஆப்ஸ்டோர் இரண்டையும் அணுகலாம். இதன் மூலம் பிளாக்பெரியில் இதுவரை அணுக முடியாத ஆண்ட்ராய்டு செயலிகளைப் (ஆப்ஸ்) பயன்படுத்தலாம் என்பது உண்மையிலேயே விசேஷமானது.
இது தவிர பிளாக்பெரியின் புதிய வசதியான பிளாக்பெரி பிலெண்டையும் அணுகலாம். இந்த வசதி வாயிலாக நோட்டிபிகேஷன், மெயில் வசதி, குறுஞ்செய்திகள் ஆகியவற்றை அணுகலாம். காலண்டர் உள்ளிட்ட வசதிகளையும் பயன்படுத்தலாம்.