ஆண்ட்ராய்டு கார்

android_car_2262200h

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்சுக்கு அடுத்தபடியாக ஆண்ட்ராய்டு இயங்கு தளத்துக்காக கார்களைக் குறி வைத்திருக்கிறது. கார்களின் டேஷ்போர்டில் இயங்கக் கூடிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை கூகுள் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் டிரைவர்கள் ஸ்மார்ட் போன் இணைப்பு இல்லாமலேயே காரில் இணையம் உள்ளிட்ட வசதிகளை இயக்கிக் கொள்ளலாம். கூகுளின் தற்போதைய ஆண்ட்ராய்டு ஆட்டோ சாப்ட்வேருக்கு காருடன் செயல்படக்கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பு தேவை.

ஆனால் புதிய வர்ஷென் ஸ்மார்ட் போன் இல்லாமலேயே செயல்படும். இந்த திட்டத்துக்கான கால வரையறை எதையும் கூகுள் நிர்ணயிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனமும் கார்களுக்கான இயங்கு தளத்தில் கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லா வகையான சாதனங்களிலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டுவருவதன் அடையாளம் இது.

Leave a Reply