ஆன்டிராய்டு போன்களை பேக்கப் செய்ய..!

download

எஸ்டி கார்டு மற்றும் இன்டர்னல் மெமரிகளின் முக்கயத்துவம் குறைய முக்கிய காரணமாக க்ளவுட் ஸ்டோரேஜ் விளங்குகின்றது. க்ளவுட் ஸ்டோரேஜ் உங்களது ஆன்டிராய்டு கருவியை பேக்கப் செய்து கொள்ள உதவியாக இருக்கின்றது. மேலும் இதன் மூலம் உங்களது கருவியில் இருக்கும் அதிகளவிலான மெமரி பாதுகாக்கப்படுகின்றது. இங்கு சந்தையில் கிடைப்பதில் ஆன்டிராய்டு கருவிகளை பேக்கப் செய்ய பயனுள்ள மற்றும் சிறந்த க்ளவுட் ஸ்டோரேஜ் அப்ளிகேஷன்களை பாருங்கள்..

காப்பி அதிக பிரபலம் இல்லாத செயலியாத இருந்தாலும் ஆன்டிராய்டு கருவிகளை பேக்கப் செய்ய பயனுள்ளதாக இந்த செயலி இருக்கின்றது. இந்த செயலி பேக்கப் செய்வதோடு பல அம்சங்களையும் கூடுதலாக வழங்குகின்றது.

கூகுள் டிரைவ் கூகுள் டிரைவ் அனைவரும் அறிந்த அப்ளிகேஷன் என்பதோடு 15ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் சேவையினை வழங்குகின்றது. மேலும் இதில் பல வகையான ஃபைல்களை வைத்த கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிராப் பாக்ஸ் இந்த செயலி 2ஜிபி யில் துவங்கி 16ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதிகளை அளிப்பதோடு இலவசமாகவும் கிடைக்கின்றது

பாக்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி பயன்படுத்த எளிமையாகவும் இருக்கின்றது. இந்த செயலி அதிக பட்சமாக 10ஜிபி வரை இலவச ஸ்டோரேஜினை வழங்குகின்றது.

சுகர்சின்க் இந்த செயலி மூன்று மாத காலத்திற்கு சுமார் 5 ஜிபி இலவச் ஸ்டோரேஜ் மற்றும் 100 ஜிபி ஸ்டோரேஜிற்கு ஒரு மாதத்திற்கு $9.99 வரை செலவாகின்றது.

மீடியாஃபயர் இந்த செயலி அதிகபட்சமாக 50ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் வழங்குவதோடு பயன்படுத்த சிறந்ததாகவும் இருக்கின்றது.

மெகா இலவச ஸ்டோரேஜாக சுமார் 50ஜிபி வழங்கும் இந்த அப்ளிகேஷன் ஆன்டிராய்டு கருவிகளுக்கு சிறப்பான்தாக இருக்கின்றது.

Leave a Reply