இரத்த சோகை ஏன் வருகிறது? தடுக்கும் உணவுகள்

3e730a68-7d8c-4418-815c-1c499718ce13_S_secvpf

இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டாலே இரத்த சோகையினைத் தவிர்க்கலாம்.

தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். ஒரே நேரத்தில் 100 கிராம் தேன் சாப்பிட வேண்டாம் மூன்று அளவாக பிரித்து சாப்பிடவும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பா‌ல், த‌ண்‌ணீ‌ர்) சாப்பிடலாம்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

தினமும் இரவு படுக்கபோகும் முன்பு ஆரிய வெந்நீர் அல்லது ஆறிய பாலில் ஒரு மேஜைக்கரண்டி தேன் கலந்து பருகிவிட்டு படுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நல்ல உறக்கமும் வரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை குடிக்கலாம் ..

இரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, இரத்தச் சோகை நீங்கும்.

முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும்.

பொதுவாக சிவப்பு அணுக்களின் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலைதான் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.

ஆண்களுக்கு: 100 மி.லி. இரத்தத்தில் 14.5 முதல் 15.5 கிராம்களும்,

பெண்களுக்கு: 100 மி.லி இரத்தத்தில் 13.4 முதல் 14.5 கிராம்களும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல்,

குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரை: 11 கிராமுக்கு குறைவாகவும்

6 வயது முதல் 14 வயது வரை: 12 கிராமுக்கு குறைவாகவும்,

பெரியவர்களான ஆண்களுக்கு: 13 கிராமுக்கு குறைவாகவும்,

பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும்,

கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

Leave a Reply