சவுதி அரேபியாவில் தன்னுடைய துணிச்சலை நிரூபித்த உலகின் சக்தி வாய்ந்த பெண்

சவுதி அரேபியாவில் தன்னுடைய துணிச்சலை நிரூபித்த உலகின் சக்தி வாய்ந்த பெண்

சவுதி அரேபியா இன்னும் பழமையில் ஊறிய நாடுகளில் ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல சட்டதிட்டங்களை வகுத்துள்ள நாடு. இங்கு பெண்கள் தலையங்கியின்றி வெளியில் நடமாட முடியாது. மீறி நடமாடினால் கடுமையான தண்டனை கிடைக்கும்

இந்நிலையில் அரசுமுறை சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்ற ஜெர்மனி அதிபரும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதலில் இருப்பவருமான ஏஞ்சலா மெர்க்கல் தலையங்கி இல்லாமல் சவுதிக்கு சென்றதோடு அந்நாட்டு அரசருடனுடம் உரையாற்றினார். இந்த துணிச்சலான செய்கைக்கு உலகில் உள்ள பெண்கள் அமைப்பு வாழ்த்து தெரிவித்து வருகிறது

இதற்கு முன்னர் சவுதி அரேபியாவில் தலையங்கி துணிச்சலாக சென்றவர்களான இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் எதிரி ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டவர்கள் பட்டியலில் தற்போது ஏஞ்சலா மெர்கலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply