ஆங்கிலேயருக்கு அருளிய அன்னை!

LRG_201510161622557318591812-ல் ரோஸ் பீட்டர் என்பவர் மதுரை கலெக்டராக இருந்தார். அவர் பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்து பிரமித்தார். சிறப்பாக விழாக்கள் நடைபெறுவதையும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவதையும் கண்டு நெகிழ்ந்தார். அவர் அயல் நாட்டவரென்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை. அவர் கோயில் அதிகரிகளை அழைத்துப் பேசி, மீனாட்சி கோயில் மகிமையையும், பக்திச் சிறப்பையும் உணர்ந்தார். கோயில் விழாக்களின்போது உற்சவ மூர்த்திகள் வீதியுலா வருவதன் தத்துவமென்ன? வயதானவர்கள். உடல் ஊனமுற்றவர்கள் போன்ற கோயிலுக்கு வர இயலாதவர்களுக்கு தெய்வமே வெளியில் காட்சி தருவதுதான். இந்த கலெக்டர் போன்றோருக்கு அது பொருந்தும்.

விழாக்காலங்களில் அன்னை மீனாட்சி அற்புதமான அலங்காரங்களுடன் வீதியுலா வருவாள். நாதஸ்வரம், மேளம், தேவாரப் பாடல்கள் போன்றவை பக்தர்களுக்கு குதூகலமூட்டும். இவற்றையெல்லாம் கண்டு பீட்டருக்கு மீனாட்சி மீது பக்தி உண்டானது. அவரது பக்தியைக் கண்டு பீட்டர் பாண்டியன் என்றே மக்கள் அழைத்தனர்.

ஒருநாள் இரவு அவர் தன்வீட்டு மாடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம் ஒரு சிறு பெண் அவர் அறைக்கு வந்து, பீட்டர், எழுந்திரு என்று உத்தரவிட்டாள். விழித்தெழுந்தார் பீட்டர். வெளியே பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. யாரிந்த சிறு பெண்? அறைக்குள் எப்படி வந்தாள் என்று யோசிக்கும்போதே, சீக்கிரம் கீழே போ என்று அதட்டலாகச் சொன்னாள். அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து பீட்டர் விட்டைவிட்டு வெளியேவர, அவர் படுத்திருந்த அறையின் கூரை சரிந்து விழுந்தது. அங்கு அவர் இருந்திருந்தால் நிச்சயம் இறந்திருப்பார். பதட்டத்துடன் அவர் அந்த சிறுமியைப் பார்க்க, ஒரு விநாடி மீனாட்சிபோல் தோற்றம்காட்டி மறைந்து விட்டாள் சிறுமி. நெருக்குருகி நின்றார் பீட்டர். மீனாட்சி தேவியே! சாற்றப்பட்டிருந்த அறைக்குள் சிறு பெண் வடிவில் வந்து, ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி உயிரைக் காப்பாற்றினாயே! என்று கண்ணீர் சிந்தினார். அதற்கு நன்றி தெரிவிக்க மீனாட்சியின் குதிரை வாகனத்துக்கு தங்கக்காப்பு வழங்கினார். அன்னையின் கருணையில் வேற்றுமை என்பதே இல்லை

Leave a Reply