இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் கடுமையாக போட்டியிட்ட நிலையில் அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்த பதவியில் இருப்பார் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி பொறுப்பேற்கவுள்ளார்.
சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரை காரணமாகவே கும்ப்ளேவுக்கு இந்த பதவியை கொடுப்பதாகவும், அவருடைய தலைமையில் இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக மாறும் என்றும் அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கும்ப்ளே கூறியபோது, ‘என்னை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்த பிசிசிஐக்கு நன்றி. இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். சரியான பயிற்சியின் மூலம் அவர்கள் உலகின் சிறந்த வீரர்களாகவும், நமது அணி மிகச்சிறந்த அணியாகவும் மாற முயற்சிப்பேன்’ என்று கூறியுள்ளார்.