தனுஷ் நடித்த ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து அஜீத், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு கோலிவுட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவது, சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆகியவற்றிலும் அவ்வப்போது அனிருத் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஷ்யாம்குமார் இயக்கி வரும் ‘ஆக்கோ’ என்ற படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அந்த படத்தில் ஒரு பாடலை பாடியதோடு, இந்த பாடலுக்கு நடனம் ஆடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பிரபல நடிகை எமி ஜாக்சன் இணைந்து ஆடவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த பாடலின் படப்பிடிப்பு வரும் முழுக்க முழுக்க அமெரிக்காவின் முக்கிய நகரமான கலிபோர்னியாவில் படமாக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக அனிருத் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா, அர்ஜூனன், சுவாமிநாதன், ஷரத் உள்பட பல புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை தீபன் பூபதி மற்றும் ரடேஷ் வேலு ஆகிய இருவரும் தயாரித்து வருகின்றனர்.