சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படத்தின் கதை முழுவதும் இலங்கையில் இருந்து வெளிவரும் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளதால் இயக்குனர் லிங்குசாமி உள்பட அஞ்சான் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக லிங்குசாமி தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் சூர்யா ஒரே வேடத்தில்தான் நடித்துள்ளதாகவும், ஒருவரே இரண்டுவித கெட்டப்புகளில் வருவதாகவும், தெரிவித்துள்ள அந்த இலங்கை இணையதளம் படத்தின் கதை முழுவதையும் விலாவரியாக இரண்டு பக்கங்களுக்கு கதையை வெளியிட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கதை வெளியே தெரிந்துவிட்டதால் சூர்யா, லிங்குசாமி உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அஞ்சான் முழுக்க முழுக்க டிஜிட்டல் பிரிண்ட் ஆக வெளியாவதால் இந்த படத்தின் திருட்டி டிவிடி வெளிவராது என்றும் அப்படியே வெளிவந்தாலும், அது எந்த பிரிண்ட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை எளிதாக கண்டறிய முடியும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தாலும், இப்பொழுதே சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் திருட்டி டிவிடி குழுவினர் படத்தை திருட்டுத்தனமாக தயாரித்து, ஆகஸ்ட் 15 அன்று மாலையே வெளியிட தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். அந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள கதைக்கும் அஞ்சான் படத்தின் கதைக்கும் சம்மந்தமில்லை என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.