தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாழ்நாள் தடை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளிவருவந்து கொண்டிருப்பதால், அஞ்சலி இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் களஞ்சியம் இயக்கி வந்த “ஊர் சுற்றி புராணம்” என்னும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி, திடீரென கடந்த வருடம் காணாமல் போனார்.களஞ்சியம் கொடுத்த டார்ச்சர் மற்றும் சித்தி கொடுமை ஆகிய காரணங்களால் அஞ்சலி தலைமறைவானதாக கூறப்பட்டது.
பின்னர் ஒரு பிரபல அரசியவாதியின் பாதுகாப்பில் அமெரிக்காவில் சிலகாலம் இருந்துவிட்டு, மீண்டும் இந்தியா திரும்பி வந்து, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் புதிய தமிழ் படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்ததால், இயக்குனர் களஞ்சியம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
நடிகை அஞ்சலி தனது படத்தில் நடிக்காமல் திடீரென மறுத்துவருவதால், தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் அஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இயக்குனர் களஞ்சியத்தின் புகாரை அடுத்து களஞ்சியம் படத்தை அஞ்சலி முடித்துக்கொடுத்தால் மட்டுமே அவர் வேறு படங்களில் நடிக்க முடியும் என்றும், வேறு இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அஞ்சலியை அதுவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் அஞ்சலிக்கு வாழ்நாள் தடை விதித்தனர். இந்த தடை உத்தரவை தெலுங்கு திரையுலகமும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகும் தடை விதிக்க ஆலோசனை செய்து கொண்டிருப்பதால், அஞ்சலி சினிமாவை விட்டே விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று பிரபல தொழிலதிபருடன் செட்டிலாகிவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.