2020-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலரில் அன்னை தெரசா படம்
அமெரிக்காவில் உள்ள 10 டாலர் நோட்டில் தற்போது இடம்பெற்றுள்ள அலெக்சாண்டர் ஹேமில்டனின் உருவப்பத்திற்கு பதிலாக அன்னை தெரசாவின் உருவப்படத்தை வைக்க அமெரிக்க கருவூலத் துறை ஆலோசித்து வருவதாகவும் வரும் 2020-ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்யும்போது இந்த மாற்றம் செய்யப்படும் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அமெரிக்க 10 டாலர் நோட்டில் புதியதாக யாருடைய உருவப்படத்தை இடம்பெறச் செய்யலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. 11 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் ஜான் கசிச், அன்னை தெரசாவின் புகைப்படத்தை இடம்பெறச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினார் அவரது ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்னை தெரசா பலரது வாழ்வுக்கு உத்வேகமளிப்பவராக இருப்பதாகவும், அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்றும் அவர் குறிப்பிட்ட ஜான் சுசி, அவரது படத்தை இடம்பெற செய்வதுதான் இந்த நேரத்தில் பொருத்தமானது என்று கூறினார்.
நோபல் பரிசு பெற்ற கருணையின் மறு உருவமான அன்னை தெரசாவின் உருவப்படம் அமெரிக்காவின் 10 டாலர் நோட்டில் வரும் 2020 ஆம் ஆண்டு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.