சாராய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்: அண்ணாமலை
சாராய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
சாராய அமைச்சருக்கு காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். “எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்” என்று நான் சொன்னதாக பொய்களை கட்டவிழ்த்து விடும் சாராய அமைச்சர் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்
அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அதற்கு தண்டனையாக குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது சாராய அமைச்சர் மூட வேண்டும்.
அதுவும் முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட வேண்டும்.