அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2015-16ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை அண்ணாமலை தேர்வு மையங்களில் (ஸ்டடீ சென்டர்) மூலமாகவும் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.1500. தபால் மூலம் பெற ரூ.1550 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
மெரிட் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இணையதள முகவரியை பார்க்கலாம்.