வடகொரியா மீது இன்னொரு தடை? இன்று ஐநாவில் வாக்கெடுப்பு

வடகொரியா மீது இன்னொரு தடை? இன்று ஐநாவில் வாக்கெடுப்பு

அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தடை விதிக்க ஆலோசனை செய்து வருகிறது.

இந்த புதிய பொருளாதார தடை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு ஐ.நாவில் இன்று நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 15 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருளாதார தடை அமலுக்கு வந்தால் வடகொரியாவின் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply