பால்வளத்துறை அமைச்சர் திடீர் நீக்கம். வாட்ஸ் அப் சர்ச்சை காரணமா?
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரண்டு மாதங்களே இருக்கின்றது. தேர்தலுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில் தற்போது பதவி வகித்து வரும் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். அவர்தான் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா. இவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் வகித்த பால்வளத்துறையை அமைச்சர் ப.மோகன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவிய புகைப்பட சர்ச்சை ஒன்றினால்தான் ரமணா நீக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும் இவரது நீக்கத்திற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.