தேவயானி வழக்கில் மற்றுமொரு திருப்பம்

நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக உள்ள தேவயானியை பொது இடத்தில் கையில் விலங்கிட்டு கைது செய்ததற்கும், அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் இந்திய கண்டனம் தெரிவித்ததை அடுத்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க மன்னிப்பு கோரவேண்டுமென இந்தியாவும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரவோ, வழக்கை திரும்ப பெறவோ முடியாது என அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

விசா மோசடி வழக்கில் இந்தியப் பெண் தூதர் தேவயானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், வீட்டு பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட் அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட், இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து டெல்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தேவயானி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply