என்ன நடக்குது தெலுங்கானாவில்? மீண்டும் ஒரு பெண் எரித்து கொலை

என்ன நடக்குது தெலுங்கானாவில்? மீண்டும் ஒரு பெண் எரித்து கொலை

நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பிரியங்கா ரெட்டி என்ற பெண் கால்நடை மருத்துவர் பாதி எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட அதே இடத்தில் மேலும் ஒரு பெண்ணின் பிணம் அதேபோல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தெலுங்கானா மாநிலத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

இந்த இரண்டு கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்குமா? இந்த இரண்டு கொலைகளையும் செய்த ஒரே குரூப்தானா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

பெண் கால்நடை கால்நடை மருத்துவர் பிரியங்காவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இன்னொரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

ஆனால் இது அரசியல் செய்ய வேண்டிய விஷயம் இல்லை என்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Leave a Reply