தமிழகத்தில் முதல்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில்புகைபடத்துடன் கூடிய விடைத்தாள்.

OLYMPUS DIGITAL CAMERA தமிழகத்தில் முதன்முறையாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார். இம்முறை படிப்படியாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 5 உறுப்புக் கல்லூரிகள், 65 தனியார் கல்லூரிகள் மற்றும் தருமபுரியில் முதுநிலை விரிவாக்க மையம் என சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ – மாணவிகள் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் படித்து வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவ – மாணவியருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்வுக் கூட ஹால் டிக்கெட் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது பெரியார் பல்கலைக்கழகம் முன் மாதிரி முயற்சியாக, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளையும் அதன் துணை வேந்தர் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Leave a Reply