நேபாளம் தலைநகர் காத்மண்ட் நகரில் இன்று நடக்கவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற கூடங்குளம் உதயகுமார் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் இந்த மாநாட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் டெல்லி போலீஸார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிக்கும் கருத்தரங்கு ஒன்று டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் அனுமதி கிடைக்காததால், பின்னர் அந்த கருத்தரங்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று நடக்கவிருந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உதயகுமாருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காத்மண்ட் விமானத்தில் செல்ல முற்பட்டபோது அவரை வழிமறித்த டெல்லி போலீஸார், அவரை வெளிநாட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.