சிலி நாட்டில் மீண்டும் பூகம்பம். 2600 வீடுகள் தரைமட்டம்.

c8

நேற்று 8.2 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சியால் அதிர்ந்த சிலி நாட்டில் இன்று மீண்டும் 7.6 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதால், அந்த நாடே கடும் பதட்டத்தில் உள்ளது. இன்று ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 8 பேர் வரை பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 2600 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள்து.

கடும் பூமியதிர்ச்சி காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  பூமியதிர்ச்சி ஏற்பட்ட சில நிமிடங்களில் மிகப்பெரிய அலைகள் தோன்றியதால் சுமார் 900,000 பேர் வரை கடலோரப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சிலி அதிபர் Michelle Bachelet உடனடியாக பூமியதிர்ச்சி ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேதமதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. சிலி நாட்டின் Iquique நகரமே அதிர்ச்சியில் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Chile Earthquake Chile Earthquake Chile Earthquake APTOPIX Chile Earthquake Chile Earthquake Chile Earthquake Chile Earthquake

Leave a Reply