நயன்தாரா பட வில்லனுக்கு வந்த 3வது காதல்
அதர்வா, நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகர் மட்டுமின்றி இயக்குனரும் கூட
இந்த நிலையில் அனுராக் காஷ்யப்புக்கு மூன்றாவது காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ஆர்த்தி பஜாஜ், கல்கி கோச்லின் ஆகிய இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் செய்த அனுராக், தற்போது 22 வயது இளம்பெண்ணான சுபத்ரா ஷெட்டி என்பவரை காதலித்து வருவதாகவும், அடிக்கடி இருவரும் வெளியிடங்களில் சுற்றுவதோடு, சினிமா விழாக்களுக்கு சேர்ந்தே வருவதாகவும் தெரிகிறது.
எனவே மிக விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் வதந்தி பரவி வருகிறது. ஆனால் இந்த வதந்திக்கு அனுராக் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கூறப்படவில்லை.