கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் மேயர் வேட்பாளராக அவரே போட்டியிட போவதாக ஒரு தகவலும் ஒரு பெண் கல்லூரி அதிபர் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது
இந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கோவை மேயர் தேர்தலில் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறாது.
ஒருவேளை அவர் போட்டியிடவில்லை என்றால் கோவையைச் சேர்ந்த கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை கோவை மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.