காஞ்சி மடாதிபதிகளிடம் ஆசி பெற்ற ஆந்திர முதல்வர்
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் புஷ்கர மேளா நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுர மடாதிபதி ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திர சுவாமிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆசி பெற்றனர். மேலும் காஞ்சி மடாதிபதிகள் நேற்று நடந்த புஷ்கர மேளாவில் சிறப்பு பூஜைகளும் செய்தனர்.
முன்னதாக இந்த விழாவையொட்டி, விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி யினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது. நீராடும் மக்களைக் கண்காணிக்க கிருஷ்ணா ஆற்றங்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மக்களின் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளன