பெண்களின் பாலியல் குற்றங்களை குறைக்க உதவுகிறது ‘ஐ’.

AP-CM-Chandrababu-Naidu2-320x180இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை டெக்னாலஜியின் மூலம் தவிர்க்க போலீஸார் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஆந்திர அரசு நடத்திய பேச்சுவார்த்தையில்  மாநிலம் முழுவதும்  ‘ஐ கிளிக்’ இயந்திரத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்கள், இந்த இயந்திரத் தின் மூலம் மிக எளிதாக காவல்நிலையத்தில்புகார் அளிக்கலாம். புகார் அளித்தவரின் பெயர் மற்றும் விபரங்கள் ரகசியமாக காக்கப்படும். கல்வி அறிவு இல்லாத பெண்களும் இந்த இயந்திரத்தின் மூலம் மிக எளிதாக புகார் தெரிவிக்கலாம். இளம்பெண்களில் சிலர் புகார் அளிக்க தயங்குவதால்தான் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. எனவே இதுபோன்ற நவீன டெக்னாலஜி மூலம் பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.,

மேலும் இந்த இயந்திரத்தின் ஒரு பட்டனை அழுத்திவிட்டு தங்களது புகாரை தெரிவித்தால், அது ‘வாய்ஸ் மெசேஜ்’ மூலம் புகார் பதிவு செய்யப்பட்டு அந்த தகவல் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். இந்த இயந்திரத்தில் 24 மணி நேரமும் புகார் செய்ய முடியும். புகாரின் தன்மையை மதிப்பிட்டு, அவசரமானதாக இருந்தால் புகார் பதிவான பகுதிக்கு உடனடியாக காவல்துறையினர் வருவார்கள். தற்போது ஆந்திராவில் உள்ள அனைத்து ஏ.டி.எம் செண்டர்களின் அருகில் இந்த ஐ கிளிக் இயந்திரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply