சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியாவின் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்த ஏபிஐஏ டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தியா, பாகிஸ்தான் ஜோடியான போபண்ணா, குரேஷி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் கைகோர்த்தது. இந்த ஜோடி நேற்று சிட்னி நகரில் நடந்த ஏபிஐஏ டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஹூய்-இங்லோட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் போபண்ணா-குரேஷி ஜோடி 6-7, 7-6,10-3 சென்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி நாளை அரையிறுதியில் ரோஷோல்-செளசா ஜோடியுடன் மோதுகிறது.