ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை தரமுடியாது. அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை தரமுடியாது. அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அதிமுகவில் உள்ள ஒருசில தலைவர்களே கூறி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் இதுகுறித்து தனது சந்தேகத்தை பதிவு செய்தார். ஆனால் இதற்கு பதில் தரவேண்டிய அப்பல்லோ மருத்துவமனையும், சசிகலா தரப்பும் எந்தவித பதிலையும் கூறாமல் கமுக்கமாக உள்ளனர்.

இந்நிலையில் நீலகிரியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சிஅ தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் தர மறுத்துள்ளது.

இதுகுறித்து  மருத்துவமனை  நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவமனை, இந்திய சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, இயங்கும் பொது நிறுவனம். இந்நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன், அதிகார எல்லைக்கு உட்படவில்லை. தாங்கள் கேட்ட விபரங்களை, எங்களால் வழங்க இயலாது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அலுவலகம் ஆசிரியர் ராஜ்குமாருக்கு அளித்துள்ள பதிலில் ‘தங்கள் விண்ணப்பம், தகவல் அறியும் உரிமை சட்டம்-2005, ஆறாவது பிரிவின் மூன்றாவது உட்பிரிவின் கீழ்படி, பொதுத்துறையின், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறையின் மேல் முறையீடு அலுவலருக்கு, மேல்முறையீடு செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply