அப்பல்லோ ஆய்வை திடீரென ரத்து செய்த ஆறுமுகச்சாமி

அப்பல்லோ ஆய்வை திடீரென ரத்து செய்த ஆறுமுகச்சாமி

ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து கொண்ட அறையை இன்று ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த விசாரணையை ஆறுமுகச்சாமி அவர்களின் ஆணையம் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்தக்கட்ட விசாரணையாக ஆறுமுகச்சாமியின் ஆனையம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இருந்த தளம், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, ஜெயலலிதா தங்கியிருந்த அறை போன்றவற்றில் இன்று வழக்கறிஞர்கள் ஆய்வு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று இரவு அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய அப்பல்லோவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

Leave a Reply