முதல்வர் உடல்நிலை நிலவரம். அப்பல்லோ மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆ தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையால் விரைவாக குணமாகி வருவதாகவும் இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனிடையே முதல்வருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு உயர் ரக சிகிச்சை அளித்தார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றை சரிசெய்வதற்கான மருந்துகள் மற்றும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.