கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு தனி செயலி: இனி ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் தற்போது அதில் மேலும் ஒரு முயற்சியாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு என தனி செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இந்த செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி ஸ்கைப் வசதியுடன் செயல்பட கூடியது என்பதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் கோஆப்டெக்ஸ் ஊழியர்களிடம் பொருள்கள் குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்
மேலும் கோஆப்டெக்ஸ் செயலி மூலம் ஆன்லைனிலேயே தங்களுக்கு பிடித்த பொருளை ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.