இங்கிலாந்து தொலைக்காட்சியில் 5 வயது சிறுவனின் நேரடி பேட்டி.

live interviewஇங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பில் 5 வயது சிறுவன் ஒருவனுடன் எடுத்த பேட்டி ஒன்றின் வீடியோ உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.

ஐந்து வயது சிறுவன் தனது மழலை மொழியில் கொடுத்த பேட்டியை இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனமான  WNEP TV என்ற நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பியது. ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இந்த பேட்டி, யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருசில மணிநேரத்தில் 82,000 பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் அந்த வீடியோவுக்கு கமெண்ட்டும் அளித்துள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களிலும் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேட்டி குறித்து சிறுவனின் தாத்தா கூறும்போது, தான் பேரனுடன் ஷாப்பிங் சென்றுகொண்டிருந்தபோது, தொலைக்காட்சி நிறுவனத்தினர் தன்னிடம் பேட்டி கேட்டதாகவும், ஆனால் பேட்டி கொடுக்க நான் மறுத்துவிட்டு எனக்கு பதிலாக என்னுடைய பேரனிடம் பேட்டி எடுக்குமாறு விளையாட்டாக கூறியதாகவும், உடனே அந்த தொலைகாட்சி நிறுவனத்தார் உண்மையிலேயே என்னுடைய பேரனிடம் பேட்டி எடுத்ததாகவும் கூறினார். இந்த பேட்டியின் வீடியோவை தற்போது பார்க்கலாம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1zSXdcX” standard=”http://www.youtube.com/v/aB0w8HIdybI?fs=1″ vars=”ytid=aB0w8HIdybI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5592″ /]

Leave a Reply