சல்மான்கான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு. மகாராஷ்டிரா அரசு முக்கிய அறிவிப்பு

சல்மான்கான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு. மகாராஷ்டிரா அரசு முக்கிய அறிவிப்பு
salman
கடந்த 2002-ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு ஒரு வாரத்திர்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “சல்மான் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான உத்தரவு அரசு வழக்கறிஞர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்” என்று கூறினார்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஒருவர் உயிரிழக்கவும், 4 பேர் பலத்த காயமடையவும் காரணமாக சல்மான்கான் இருந்ததாக தொடரப் பட்ட வழக்கில் சல்மான்கானுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுளை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவரை விடுதலை செய்தது.

சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஏற்கெனவே அறிவித்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply