13 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக சரிவை சந்தித்த ஆப்பிள் நிறுவனம்.

13 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக சரிவை சந்தித்த ஆப்பிள் நிறுவனம்.

apple ceoகடந்த 13 ஆண்டுகளில் முதன்முறையாக உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதி நிலைமை பற்றி விவாதிக்கும் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக் “இந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டால், ஆப்பிள் 56 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆப்பிளின் விற்பனை குறைந்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் குறைந்த வசதிகள் கொண்டவையாகவும், ஆரம்ப கட்ட போன்களாகவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நெட்வொர்க் மற்றும் பொருளாதாரம் தான் காரணம்.

இந்தியாவில் சந்தை மதிப்பு குறைவுதான். என்னை பொறுத்தவரை தற்போது இந்தியா, 7 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் சீனா இருந்த நிலையில் உள்ளது. ஆனால், அங்கு சந்தை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.

Leave a Reply