ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பிய பெண் வழக்கறிஞர்

ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பிய பெண் வழக்கறிஞர்

ஆப்பிள் வாட்ச் கொடுத்த எச்சரிக்கை காரணமாக புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள நிலையில் புனேவை சேர்ந்த ஆர்த்தி ஜொஜெல்கர் என்ற வழக்கறிஞர் சமீபத்தில் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கினார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்து கொண்டிருந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த அனைத்து விபரங்களையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்

இந்த நிலையில், கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து, எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து அவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது. இதனையடுத்து ஆப்பிள் வாட்ச்சின் உதவியினால் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply